Sriman Narayaneeyam - Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை (ச்லோகம் 913)
Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை
ஸத்ய: ப்ரஸாத ருஷிதாந் விதி சங்கராதீந் கேசித் விபோ நிஜ குணாநுகுணம் பஜந்த: ப்ரஷ்டா பவந்தி பத கஷ்டமதீர்க த்ருஷ்ட்யா ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதாஹரணம் கிலாஸ்மிந் ஸத்ய: ப்ரஸாத ருஷிதாந் விதி சங்கர ஆதீந் கேசித் விபோ நிஜ குண அநுகுணம் பஜந்த: ப்ரஷ்டா பவந்தி பத கஷ்டம் அதீர்க த்ருஷ்ட்யா ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதாஹரணம் கில அஸ்மிந் सद्यःप्रसादरुषितान् विधिशङ्करादीन् कचिद्विभो निजगुणानुगुणं भजन्तः । भ्रष्टा भवन्ति बत कष्टमदीर्घदृष्ट्या स्पष्टं वृकासर उदाहरणं किलास्मिन्
குருவாயூரப்பா! நான்முகனும் சிவனும் வெகு சீக்கிரம் மகிழ்ச்சி மற்றும் கோபம் அடைபவர்கள் ஆவர். இவர்களை தங்கள் குணத்திற்கு ஏற்ப மக்கள் வணங்குவார்கள். ஆனால் நீண்ட காலத்தைப் பற்றி யோசிக்காமல் வணங்குவதால் ஒரு நிலையில் வீழ்ச்சி அடைகின்றனர். வ்ருகாசுரனின் சரிதம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு அல்லவா?