Sriman Narayaneeyam - Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை (ச்லோகம் 912)

Dasaka 89 - வ்ருகாஸுர வதம், ப்ருகு முனிவர் பரீக்ஷை

ரமாஜாநே ஜாநே யதிஹ தவ பக்தேஷு விபவோ ந ஸத்யஸ்ஸம்பத்யஸ்ததிஹ மத க்ருத்வாதசமிநாம் ப்ரசாந்திம் க்ருத்வைவ ப்ரதிசஸி தத: காமமகிலம் ப்ரசாந்தேஷு க்ஷிப்ரம் ந கலு பவதீயே ச்யுதி கதா ரமாஜாநே ஜாநே யத் இஹ தவ பக்தேஷு விபவோ ந ஸத்ய: ஸம்பத்ய: தத் இஹ மத க்ருத்வாத் அசமிநாம் ப்ரசாந்திம் க்ருத்வா ஏவ ப்ரதிசஸி தத: காமம் அகிலம் ப்ரசாந்தேஷு க்ஷிப்ரம் ந கலு பவதீயே ச்யுதி கதா रमाजाने जाने यदिह तव भक्तेषु विभवो न सम्पद्यस्सद्यस्तदिह मदकृत्त्वादशमिनाम् । प्रशान्तिं कृत्वैव प्रदिशसि ततः काममखिलं प्रशान्तेषु क्षिप्रं न खलु भवदीये च्युतिकथा

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மஹாலக்ஷ்மியின் நாயகனே! இந்த உலகில் உனது பக்தர்களுக்குச் செல்வம் என்பது விரைவாகச் சேர்வது கிடையாது. அப்படிச் சேர்ந்தால் அது பக்திக்குத் தடையாக உள்ள கர்வத்தை உண்டாக்கிவிடும் என்றே நான் கருதுகிறேன். அமைதி இழந்து தவிப்பவர்களுக்குத் தேவையான அமைதியை நீ அளிக்கிறாய். பின்னர், அமைதி அடைந்தவுடன் அவர்கள் விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றுகிறாய். நீ உனது பக்தர்களை நழுவ விடுதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-88 மற்றும் 89 (முதல் 20 ச்லோகங்கள்) ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.