Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 911)

Dasaka 88 - ஸந்தான கோபாலன்

ஸோSயம் க்ருஷ்ணாவதார ஜயதி தவ விபோ யத்ர ஸௌஹார்த்த பீதி ஸ்நேஹ த்வேஷாநுராக ப்ரப்ருதிபி: அதுலைரச்ரமைர் யோகபேதை: ஆர்த்திம் தீர்த்வா ஸமஸ்தாமம்ருத பதம் அகுஸ்ஸர்வத: ஸர்வலோகா: ஸ த்வம் விச்வார்த்தி சாந்த்யை பவநபுரபதே பக்தி பூர்த்யை ச பூயா: ஸ: அயம் க்ருஷ்ண அவதார ஜயதி தவ விபோ யத்ர ஸௌஹார்த்த பீதி ஸ்நேஹ த்வேஷ அநுராக ப்ரப்ருதிபி: அதுலை: ஆச்ரமை: யோக பேதை: ஆர்த்திம் தீர்த்வா ஸமஸ்தாம் அம்ருத பதம் அகு: ஸர்வத: ஸர்வலோகா: ஸ த்வம் விச்வ ஆர்த்தி சாந்த்யை பவநபுர பதே பக்தி பூர்த்யை ச பூயா: सोऽयं कृष्णावतारो जयति तव विभो यत्र सौहार्दभीति - स्नेहद्वेषानुरागप्रभृतिभिरतुलैरश्रमैर्योगभेदैः । आर्तिं तीर्वा समस्ताममृतपदमगुस्सर्वतः सर्वलोकाः स त्वं विश्वार्तिशान्त्यै पवनपुरपते भक्तिपूर्त्यै च भूयाः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது இந்த கிருஷ்ணாவதாரம் அனைத்து அவதாரங்களையும் விட சிறப்பானது ஆகும். என்ன காரணம்? இந்த அவதாரத்தில் யோக மார்க்கம் போன்ற கடினமான வழிகளில் மோக்ஷம் அடையாமல், எளிய வழிகளான அன்பு (வஸுதேவர்), பயம் (கம்ஸன்), பகைமை (சிசுபாலன்), நட்பு (பாண்டவர்கள்), காமம் (கோபிகைகள்) முதலானவை மூலம் பலரும் மோக்ஷம் பெற்றனர். இப்படிப்பட்ட க்ருஷ்ணனாகிய நீயே இந்த உலகின் துன்பங்கள் நீங்கவும், பக்தி என்பது வளரவும் அருள் புரிய வேண்டும்.***