Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 910)

Dasaka 88 - ஸந்தான கோபாலன்

ப்ராயேண த்வாரவத்யாமவ்ருதத் அயி ததா நாரதஸ்த்வத் ரஸார்த்ர: தஸ்மால்லேபே கதாசித் கலு ஸுக்ருத நிதிஸ்த்வத் பிதா தத்வ போதம் பக்தாநாமக்ரயாயீ ஸ ச கலு மதிமாநுத்தவஸ்த்வத்த ஏவ ப்ராப்தோ விஜ்ஞாந ஸாரம் ஸ கில ஜந ஹிதாயாதுநாSSஸ்தே பதர்யாம் ப்ராயேண த்வாரவத்யாம் அவ்ருதத் அயி ததா நாரத: த்வத் ரஸ ஆர்த்ர: தஸ்மாத் லேபே கதாசித் கலு ஸுக்ருத நிதி: த்வத் பிதா தத்வ போதம் பக்தாநாம் அக்ரயாயீ ஸ ச கலு மதிமாந் உத்தவ: த்வத்த ஏவ ப்ராப்த: விஜ்ஞாந ஸாரம் ஸ கில ஜந ஹிதாய அதுநா ஆஸ்தே பதர்யாம் प्रायेण द्वारवत्यामवृतदयि तदी नारदस्त्वद्रसार्द्र - स्तस्माल्लेभे कदाचित्खलु सुकृतनिधिस्त्वत्पिता तत्त्वबोधम् । भक्तानामग्रयायी स च खलु मतिमानुद्धवस्त्वत्त एव प्राप्तो विज्ञानसारं स किल जनहितायाधुनाऽस्ते बदर्याम्

குருவாயூரப்பா! உனது லீலைகளை அனுபவிக்க எண்ணி நாரதர், பெரும்பாலான நாட்களை துவாரகையிலேயே கழித்தார். அப்படி ஒருநாள் மிகுந்த புண்ணியவானான உனது தந்தை வஸுதேவர், நாரதரிடம் இருந்து பல ஞான உபதேசங்களைப் பெற்றார். பக்தர்களில் சிறந்தவரும், அறிவு நிரம்பியவரும் ஆகிய உத்தவர் உன்னிடம் இருந்தே நேரடியாக ஞானம் பெற்றார். உனது கட்டளைப்படி உத்தவர் இன்னமும் பத்ரியில் மக்களின் நலனுக்காகத் தவம் புரிகிறார்.