Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 909)
Dasaka 88 - ஸந்தான கோபாலன்
ஏவம் நாநா விஹாரைர் ஜகதபிரமயந் வ்ருஷ்ணி வம்சம் ப்ரபுஷ்ணந் ஈஜாநோ யஜ்ஞ பேதைரதுல விஹ்ருதிபி: ப்ரீணயந்நேணநேத்ரா: பூபார க்ஷேப தம்பாத் பத கமல ஜுஷாம் மோக்ஷணாயாவதீர்ண: பூர்ணம் ப்ரஹ்மைவ ஸாக்ஷாத் யதுஷு மநுஜதா ரூஷிதஸ்த்வம் வ்யலாஸீ: ஏவம் நாநா விஹாரை: ஜகத் அபிரமயந் வ்ருஷ்ணி வம்சம் ப்ரபுஷ்ணந் ஈஜாந: யஜ்ஞ பேதை: அதுல விஹ்ருதிபி: ப்ரீணயந் ஏண நேத்ரா: பூபார க்ஷேப தம்பாத் பத கமல ஜுஷாம் மோக்ஷணாய அவதீர்ண: பூர்ணம் ப்ரஹ்ம ஏவ ஸாக்ஷாத் யதுஷு மநுஜதா ரூஷித: த்வம் வ்யலாஸீ: एवं नानाविहारैर्जगदभिरमयन् वृष्णिवंशं प्रपुष्ण - न्नीजानो यज्ञभेदैरतुलविहृतिभिः प्रीणयन्नेणनेत्राः । भूभारक्षेपदम्भात् पदकमलजुषां मोक्षणायावतीर्णः पूर्णं ब्रह्मैव साक्षाद्यदुषु मनुजतारूषितस्त्वं व्यलासीः
குருவாயூரப்பா! இப்படியாக நீ பலவிதமான லீலைகள் மூலம் உலகத்தை மகிழ வைத்தாய். பல வகையான யாகங்களைச் செய்தாய். உனது பல லீலைகள் மூலம், மான் போன்ற விழி படைத்த பெண்களை மயக்கினாய். பூமியின் சுமையைக் குறைப்பது என்ற உறுதி கொண்டு உன்னைத் தொழுதவர்களுக்கும், சரணம் புகுந்தவர்களுக்கும் மோக்ஷம் அளித்தாய். இதற்காகவே யாதவ குலத்தில் பிறந்து, பரம்பொருளாகிய நீ மனித வடிவில் மறைந்து நின்றாய்.