Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 907)

Dasaka 88 - ஸந்தான கோபாலன்

தத்ராஸீநம் புஜங்காதிப சயந தலே திவ்ய பூஷாயுதாத்யை: ஆவீதம் பீதசேலம் ப்ரதி நவ ஜலத ச்யாமலம் ஸ்ரீமதங்கம் மூர்த்திநாமீசிதாரம் பரமிஹ திஸ்ருணாமேகமர்த்தம் ச்ருதீநாம் த்வாமேவ த்வம் பராத்மந் ப்ரியஸக ஸஹிதோ நேமித க்ஷேம ரூபம் தத்ர ஆஸீநம் புஜங்க அதிப சயந தலே திவ்ய பூஷ ஆயுத ஆத்யை: ஆவீதம் பீதசேலம் ப்ரதி நவ ஜலத ச்யாமலம் ஸ்ரீமதங்கம் மூர்த்திநாம் ஈசிதாரம் பரம் இஹ திஸ்ருணாம் ஏகம் அர்த்தம் ச்ருதீநாம் த்வாம் ஏவ த்வம் பராத்மந் ப்ரிய ஸக ஸஹித: நேமித க்ஷேம ரூபம் तत्रासीनं भुजङ्गाधिपशयनतले दिव्यभूषायुधाद्यैरावीतं पीतचेलं प्रतिनवजलदश्यामळं श्रीमदङ्गम् । मूर्तीनामीशितारं परमिह तिसृणामेकमर्थं श्रुतीनां त्वामेव त्वं परात्मन् प्रियसखसहितो नेमिथ क्षेमरूपम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த ஸ்ரீவைகுண்டத்தில் நீயே திவ்யமான காட்சி அளித்தாய். ஆதிசேஷன் மீது சயனித்தவனாக, எழிலுடைய பல ஆபரணங்கள் அணிந்தவனாக, ஆயுதங்களை உடையவனாக, மஞ்சள் பட்டு உடுத்தியவனாக, நீர் கொண்ட மழை மேகம்போல் நீல நிறம் உடையவனாக, திருமார்பில் மஹாலக்ஷ்மி உடையவனாக, மூன்று மூர்த்திகளும் ஒருங்கே உள்ளவனாக, வேதங்கள் அனைத்தும் விளக்கும் பொருளாக, மங்கலங்கள் அளிக்கும் இனிய உருவம் உடையவனாக நீ இருந்தாய். இப்படிப்பட்ட அந்த நாராயண ரூபத்தை, நீயும் உனது நண்பனான அர்ஜுனனும் வணங்கினீர்களாமே!