Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 906)

Dasaka 88 - ஸந்தான கோபாலன்

ஸார்த்தம் தேந ப்ரதீசீம் திசமதிஜவிநா ஸ்யந்தநேநாபியாதோ லோகாலோகம் வ்யதீதஸ்திமிர பரமதோ சக்ர தாம்நா நிருந்தந் சக்ராம்சு க்லிஷ்ட த்ருஷ்டிம் ஸ்திதம் அத விஜயம் பச்ய பச்யேதி வாராம் பாரே த்வம் ப்ராததர்ச: கிமபி ஹி தமஸாம் தூரதூரம் பதம் தே ஸார்த்தம் தேந ப்ரதீசீம் திசம் அதி ஜவிநா ஸ்யந்தநேந அபியாத: லோகாலோகம் வ்யதீத: திமிர பரம் அத: சக்ரதாம்நா நிருந்தந் சக்ர அம்சு க்லிஷ்ட த்ருஷ்டிம் ஸ்திதம் அத விஜயம் பச்ய பச்ய இதி வாராம் பாரே த்வம் ப்ராததர்ச: கிம் அபி ஹி தமஸாம் தூரதூரம் பதம் தே सार्धं तेन प्रतीचीं दिशमतिजविना स्यन्दनेनाभियातो लोकालोकं व्यतीतस्तिमिरभरमथो चक्रधाम्ना निरुन्धन् । चक्रांशुक्लिष्टदृष्टिं स्थितमथ विजयं पश्य पश्येति वारां पारे त्वं प्राददशः किमपि हि तमसां दूरदूरं पदं ते

குருவாயூரப்பா! நீ அர்ஜுனனுடன் தேரில் ஏறிக்கொண்டு மேற்குத் திசையில் விரைந்தாய். அங்கு வெகுதூரம் கடந்து லேகாலோக மலையைக் கடந்தாய். அங்கு எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. உனது சக்கரத்தை முன்னே செலுத்த அது ஒளி வீசியபடி சென்றது. அதனைப் பின்தொடர்ந்து சென்ற நீ அர்ஜுனனிடம், “அதோ பார்! ஸ்ரீவைகுண்டத்தைப் பார்”, என்று விளக்க இயலாத உனது ஸ்ரீவைகுண்டத்தைக் காண்பித்தாயாமே!