Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 905)

Dasaka 88 - ஸந்தான கோபாலன்

மாநீ ஸ த்வாம் அப்ருஷ்ட்வா த்விஜ நில கதோ பாண ஜாலைர் மஹாஸ்த்ரை: ருந்த்தாந: ஸூதிகேஹம் புநரபி ஸஹஸா த்ருஷ்ட நஷ்டே குமாரே யாம்யாமைந்த்ரீம் ததாSந்யா: ஸுரவர நகரீ: வித்யயாSSஸாத்ய ஸத்யோ மோகோத்யோக: பதிஷ்யந் ஹ்ருதபுஜி பவதா ஸஸ்மிதம் வாரிதோSபூத் மாநீ ஸ த்வாம் அப்ருஷ்ட்வா த்விஜ நில கத: பாண ஜாலை: மஹா அஸ்த்ரை: ருந்த்தாந: ஸூதிகேஹம் புந: அபி ஸஹஸா த்ருஷ்ட நஷ்டே குமாரே யாம்யாம் ஐந்த்ரீம் ததா அந்யா: ஸுரவர நகரீ: வித்யயா ஆஸாத்ய ஸத்ய: மோக உத்யோக: பதிஷ்யந் ஹ்ருதபுஜி பவதா ஸஸ்மிதம் வாரித: அபூத் मानी स त्वामपृष्ट्वा द्विजनिलयगतो बाणजालैर्महास्त्रै रुन्धानः सूतिगेहं पुनरपि सहसा दृष्टनष्टे कुमारे । याम्यामैन्द्रीं तथायास्सुरवरनगरीर्विद्ययाऽसाद्य सद्यो मोघोद्योगः पतिष्यन् हुतभुजि भवता सस्मितं वारितोऽभूत्

குருவாயூரப்பா! தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வது என்பதால் கர்வம் கொண்டிருந்த அர்ஜுனன், உன்னிடம் சொல்லாமலேயே அந்தப் ப்ராமணன் வீட்டிற்குச் சென்றான். குழந்தை பிறக்கும் அறை முழுவதையும் தனது அம்புகளால் கோட்டை போல் கட்டி மறைத்தான். அப்போது ஒரு பிள்ளை பிறந்தது. ஆனால் உடனே காணாமற் போயிற்று (இதுவரை உடலாவது இருந்தது, இப்போது அதுவும் இல்லை). இதனைக் கண்ட அர்ஜுனன் யமலோகம், இந்த்ரலோகம் முதலான லோகங்களுக்குத் தனது யோகத்தின் மூலம் சென்று குழந்தையைத் தேடினான். ஆனால் தனது முயற்சி தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து, தான் செய்த சபதத்தின்படி தீயில் விழத் தயாராக நின்றான். உடனே ஒரு புன்முறுவலோடு நீ தடுத்தாயாமே!