Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 904)

Dasaka 88 - ஸந்தான கோபாலன்

நஷ்டா அஷ்டாஸ்ய புத்ரா: புநரபி தவ தூபேக்ஷயா கஷ்டவாத: ஸ்பஷ்டோ ஜாதோ ஜநாநாமத தத் அவஸரே த்வாரகாமாப பார்த்த: மைத்ர்யா தத்ரோக்ஷிதோSஸௌ நவம ஸுத ம்ருதௌ விப்ரவர்ய ப்ரரோதம் ச்ருத்வா சக்ரே ப்ரதிஜ்ஞாமநுபஹ்ருத ஸுத: ஸந்நிவேக்ஷ்யே க்ருசாநும் நஷ்டா: அஷ்ட அஸ்ய புத்ரா: புந: அபி தவ து உபேக்ஷயா கஷ்ட வாத: ஸ்பஷ்ட: ஜாத: ஜநாநாம் அத தத் அவஸரே த்வாரகாம் ஆப பார்த்த: மைத்ர்யா தத்ர உக்ஷித: அஸௌ நவம ஸுத ம்ருதௌ விப்ரவர்ய ப்ரரோதம் ச்ருத்வா சக்ரே ப்ரதிஜ்ஞாம் அநுபஹ்ருத ஸுத: ஸந்நிவேக்ஷ்யே க்ருசாநும் नष्टा अष्टास्य पुत्राः पुनरपि तव तूपेक्षया कष्टवादः स्पष्टो जातो जनानामथ तदवसरे द्वारकामाप पार्थः । मैत्र्या तत्रोषितोऽसौ नवमसुतमृतौ विप्रवर्यप्ररोदं श्रुत्वा चक्रे प्रतिज्ञामनुपहृतसुतस्सन्निवेक्ष्ये कृशानुम्

குருவாயூரப்பா! இப்படியாக அந்தப் ப்ராமணனின் எட்டுப் பிள்ளைகள் பிறந்தவுடன் இறந்தன. துவாரகை மக்கள் அனைவரும், நீ இதனைக் கவனிக்கவில்லை; ஆகவே இப்படி நடக்கிறது என்று உன்னைக் குறித்துத் தவறாகப் பேசினார்களாமே! அந்த நேரம் அர்ஜுனன் துவாரகைக்கு வந்து உன் நண்பன் என்ற முறையில் தங்கினான். அந்த நேரத்தில் ப்ராமணனின் ஒன்பதாவது பிள்ளையும் பிறந்து இறந்தது. இதனைக் கண்ட அர்ஜுனன், அந்தப் ப்ராமணனிடம், “அடுத்து உனக்குப் பிறக்கும் குழந்தை இறந்து விட்டால் உடனே மீட்டுத் தருகிறேன். தவறினால் நான் தீக்குளிப்பேன்”, என்று சபதம் செய்தான்.