Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 903)

Dasaka 88 - ஸந்தான கோபாலன்

பூயோSத த்வாரவத்யாம் த்விஜ தநய ம்ருதிம் தத் ப்ரலாபாநபி த்வம் கோ வா தைவம் நிருந்த்யாதிதி கில கதயந் விச்வவோடாப்யஸோடோ ஜிஷ்ணோர் கர்வம் விநேதும் த்வயி மநுஜ தியா குண்டிதாம் சாஸ்ய புத்திம் தத்வாரூடாம் விதாதும் பரமதம பத ப்ரேக்ஷணநேதி மந்யே பூய: அத த்வாரவத்யாம் த்விஜ தநய ம்ருதிம் தத் ப்ரலாபாந் அபி த்வம் கோ வா தைவம் நிருந்த்யாத் இதி கில கதயந் விச்வ வோடா அபி அஸோடா: ஜிஷ்ணோ: கர்வம் விநேதும் த்வயி மநுஜ தியா குண்டிதாம் ச அஸ்ய புத்திம் தத்வ ஆரூடாம் விதாதும் பரமதம பத ப்ரேக்ஷணந இதி மந்யே भूयोऽथ द्वारवत्यां द्विजतनयमृतिं तत्प्रलापानपि त्वं को वा दैवं निरुन्ध्यादिति किल कथयन् विश्ववोढाऽप्यसोढाः । जिष्णोर्गर्वं विनेतुं त्वयि मनुजधिया कुण्ठितां चास्य बुद्धिं तत्त्वारूढां विधातुं परमतमपदप्रेक्षणेनेति मन्ये

குருவாயூரப்பா! துவாரகையில் வாழ்ந்து வந்த ஓர் அந்தணனின் குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன. அவன் மிகவும் வருத்தத்துடன், புலம்பித் தீர்த்தான். நீ அவனிடம், “தலைவிதியை யார்தான் மாற்ற இயலும்?”, என்று உலகையே தாங்குபவனாக இருப்பினும் கூறினாய். நீ இப்படி இருந்ததற்குக் காரணம், அர்ஜுனன் கொண்டிருந்த கர்வத்தை அடக்கவும், உன்னை அவன் சாதாரண மனிதன் என்று எண்ணியிருந்த எண்ணத்தை நீக்கவும், ஸ்ரீவைகுண்டத்தைக் காண்பித்து அவனுக்கு ஞானம் உண்டாக்கவும் என்பதற்காகவே ஆகும் என நான் நினைக்கிறேன்.