Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 902)
Dasaka 88 - ஸந்தான கோபாலன்
கச்சந் த்விமூர்த்திருபயோர் யுகபந்நிகேதம் ஏகேந பூரிவிபவைர் விஹிதோபசார: அந்யேந தத் திந ப்ருதைச்ச பலௌதநாத்யை: துல்யம் ப்ரஸேதித ததத ச முக்திமாப்யாம் கச்சந் த்வி மூர்த்தி: உபயோ: யுகபத் நிகேதம் ஏகேந பூரிவிபவை: விஹித உபசார: அந்யேந தத் திந ப்ருதை: ச பல ஓதந ஆத்யை: துல்யம் ப்ரஸேதித ததத ச முக்திம் ஆப்யாம் गच्छन् द्विमूर्तिरुभयोर्युगपन्निकेतमेकेन भूरिविभवैर्विहितोपचारः । अन्येन तद्दिनभृतैश्च फलौदनाद्यैस्तुल्यं प्रसेदिथ ददाथ च मुक्तिमाभ्याम्
குருவாயூரப்பா! நீ இரண்டு உருவங்கள் எடுத்தவனாக ஒரே நேரத்தில் இருவர் வீடுகளுக்கும் சென்றாயாமே! அரசன் உன்னை மிகுந்த செல்வத்தால் வரவேற்றான். ஆனால் அந்தணனோ அன்று அவன் சம்பாதித்த பழம், உணவைக் கொண்டு வரவேற்றான். நீ அவர்கள் இருவர் வரவேற்பிலும் ஒரே போன்று மகிழ்வுற்றாய். இருவருக்கும் மோக்ஷம் அளித்தாய்.