Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 901)

Dasaka 88 - ஸந்தான கோபாலன்

ச்ருத தேவ இதி ச்ருதம் த்விஜேந்த்ரம் பஹுலாச்வம் ந்ருபதிம் ச பக்தி பூர்ணம் யுகபத் த்வமநுக்ரஹீது காமோ மிதிலாம் ப்ராபிதம் தாபஸை: ஸமேத: ச்ருத தேவ இதி ச்ருதம் த்விஜேந்த்ரம் பஹுலாச்வம் ந்ருபதிம் ச பக்தி பூர்ணம் யுகபத் த்வம் அநுக்ரஹீது காம: மிதிலாம் ப்ராபித தாபஸை: ஸமேத: श्रुतदेव इति श्रुतं द्विजेन्द्रं बहुलाश्वं नृपतिं च भक्तिपूर्णम् । युगपत्त्वमनुग्रहीतुकामो मिथिलां प्रापिथ तापसैः समेतः

குருவாயூரப்பா! மிதிலை நகரத்தில் ச்ருததேவன் என்ற அந்தணன் உனது சிறந்த பக்தனாக வாழ்ந்தான். அது போன்று பஹுலாச்வன் என்ற அரசனும் இப்படியே வாழ்ந்தான். அவர்கள் இருவருக்கும் நீ ஒரே நேரத்தில் கருணை மழை பொழிய விரும்பினாய். ஆகவே முனிவர்கள் புடைசூழ நீ மிதிலைக்குச் சென்றாயாமே!விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-86-13 முதல் x-86-59 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த ச்லோகம் உள்ளது.