Sriman Narayaneeyam - Dasaka 88 - ஸந்தான கோபாலன் (ச்லோகம் 900)

Dasaka 88 - ஸந்தான கோபாலன்

ப்ராகேவாசார்ய புத்ராஹ்ருதி நிசமநயா ஸ்வீய ஷட் ஸூநு வீக்ஷாம் காங்க்ஷந்த்யா மாதுருக்த்யா ஸுதலபுவி பலிம் ப்ராப்ய தேநார்ச்சிதஸ்த்வம் தாது: சாபாத் ஹிரண்யாந்வித கசிபு பவாந் சௌரிஜாந் கம்ஸ பக்நாந் ஆநீயைநாந் ப்ரதர்ச்ய ஸ்வ பதம் அநயதா: பூர்வ புத்ராந் மரீசே: ப்ராக் ஏவ ஆசார்ய புத்ர ஆஹ்ருதி நிசமநயா ஸ்வீய ஷட் ஸூநு வீக்ஷாம் காங்க்ஷந்த்யா மாது: உக்த்யா ஸுதல புவி பலிம் ப்ராப்ய தேந அர்ச்சித: த்வம் தாது: சாபாத் ஹிரண்ய அந்வித கசிபு பவாந் சௌரிஜாந் கம்ஸ பக்நாந் ஆநீய ஏநாந் ப்ரதர்ச்ய ஸ்வ பதம் அநயதா: பூர்வ புத்ராந் மரீசே: प्रागेवाचार्यपुत्राहृतिनिशमनया स्वीयषट्सूनुवीक्षां कांक्षन्त्या मातुरुक्त्या सुतलभुवि बलिं प्राप्य तेनार्चितस्त्वम् । धातुः शापाद्धिरण्यान्वितकशिपु भवान् शौरिजान् कंसभग्ना - नानीयैनान् प्रदर्श्य स्वपदमनयथाः पूर्वपुत्रान्मरीचेः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ உனது குருவான ஸாந்தீபனி முனிவரின் குழந்தையை மீட்டு வந்து கொடுத்ததை தேவகி கேள்விப்பட்டாள் (தசகம் 76, ச்லோகம் 1). அதனைப் போன்று, கம்ஸனால் கொல்லப்பட்ட தனது குழந்தைகளையும் அழைத்து வரும்படி உன்னிடம் வேண்டினாள். நீயும் ஸுதல (பாதாளலோகம்) லோகத்தில் இருந்த மஹாபலியிடம் சென்றாய். அவன் உன்னை வரவேற்று மகிழ்ந்தான். அந்த ஆறு பிள்ளைகளும் ஒரு சாபம் காரணமாக முதலில் ஹிரண்யகசிபுவிற்குப் பிறந்தனர். பின்னர் அவர்கள் வஸுதேவருக்குப் பிறந்தனர். அப்போது கம்சனால் கொல்லப்பட்டனர். அவர்களை ஸுதல லோகத்தில் இருந்து அழைத்து வந்து தேவகியிடம் காண்பித்து, அவர்களை ஸ்ரீவைகுண்டம் அனுப்பினாய்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-85-27 முதல் x-85-57ஆகியவற்றின் சுருக்கமாக இந்த ச்லோகம் உள்ளது.