Sriman Narayaneeyam - Dasaka 87 - குசேலன் கதை (ச்லோகம் 897)

Dasaka 87 - குசேலன் கதை

யதி ஹ்யாயாசிஷ்யமதாஸ்யதச்யுதோ வதாமி பார்யாம் கிமிதி வ்ரஜந்நஸௌ த்வதுக்தி லீலா ஸ்மித மக்நதீ: புந: க்ரமாதபச்யந் மணி தீப்ரமாலயம் யதி ஹி அயாசிஷ்யம் அதாஸ்யத் அச்யுத: வதாமி பார்யாம் கிம் இதி வ்ரஜந் அஸௌ த்வத் உக்தி லீலா ஸ்மித மக்ந தீ: புந: க்ரமாத் அபச்யத் மணி தீப்ரம் ஆலயம் यदि ह्ययचिष्यमदास्यदच्युतो वदामि भार्यां किमिति व्रजन्नसौ । त्वदुक्तिलीलास्मितमग्नधीः पुनः क्रमादपश्यन्मणिदीप्रमालयम्

குருவாயூரப்பா! திரும்பி வரும் வழியில் அவன் மனதில், “நான் கிளம்பும்போது க்ருஷ்ணனிடம் ஏதேனும் யாசித்திருந்தால் கண்டிப்பாகக் கொடுத்திருப்பதான். இப்போது மனைவிக்கு என்ன பதில் கூறுவது?”, என்று நினைத்தான். ஆயினும் உடனே உனது கனிவான பேச்சிலும், வசீகரிக்கும் சிரிப்பிலும் மனம் திரும்பியவனாக நடந்தான். தனது வீட்டை நெருங்கும்போது இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டு ஒளி வீசிய மாளிகையைக் கண்டானாமே!