Sriman Narayaneeyam - Dasaka 87 - குசேலன் கதை (ச்லோகம் 896)
Dasaka 87 - குசேலன் கதை
பக்தேஷு பக்தேந ஸ மாநிதஸ்த்வயா புரீம் வஸந்நேக நிசாம் மஹாஸுகம் பதாபரேத்யுர் த்ரவிணம் விநா யயௌ விசித்ர ரூபஸ்தவ கல்வநுக்ரஹ: பக்தேஷு பக்தேந ஸ மாநித: த்வயா புரீம் வஸந் ஏக நிசாம் மஹா ஸுகம் பத அபரேத்யு: த்ரவிணம் விநா யயௌ விசித்ர ரூப: தவ கலு அநுக்ரஹ: भक्तेषु भक्तेन स मानितस्त्वया पुरीं वसन्नेकनिशां महासुखम् । बतापरेद्युर्द्रविणं विना ययौ विचित्ररूपस्तव खल्वनुग्रहः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக பக்தர்களில் உயர்ந்த குசேலனை நீ பெருமைப்படுத்தினாய். அன்று இரவு முழுவதும் உனது துவாரகை மாளிகையில் அவன் இன்பமாக இருந்தான். மறுநாள் உன்னிடம் இருந்து எந்தப் பொருளும் கேட்காமலேயே சென்று விட்டான். நீ கடாக்ஷிக்கும் முறையே வியப்பானதுதானே!