Sriman Narayaneeyam - Dasaka 87 - குசேலன் கதை (ச்லோகம் 895)
Dasaka 87 - குசேலன் கதை
த்ரபாஜுஷோSஸ்மாத் ப்ருதுகம் பலாதத ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாசிதே த்வயா க்ருதம் க்ருதம் நந்வியதேதி ஸம்ப்ரமாத் ரமா கிலோபேத்ய கரம் ருரோத தே த்ரபாஜுஷ: அஸ்மாத் ப்ருதுகம் பலாத் அத ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருத் ஆசிதே த்வயா க்ருதம் க்ருதம் நநு இயதா இதி ஸம்ப்ரமாத் ரமா கில உபேத்ய கரம் ருரோத தே त्रपाजुषोऽस्मात् पृथुकं बलादथ प्रगृह्य मुष्टौ सकृदाशिते त्वया । कृतं कृतं नन्वियतेति सम्भ्रमाद्रमा किलोपेत्य करं रुरोध ते
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தான் கொண்டு வந்த அவலை வெட்கத்தால் குசேலன் மறைத்து வைத்தான். நீ அதனைப் பறித்து ஒரு பிடி உண்டாயாமே! (நீ மேலும் ஒரு பிடி எடுத்து உண்ண முயற்சித்தபோது) ருக்மிணி ஓடி வந்து, “போதும்! இத்தனை கொடுத்தது போதும்”, என்று உனது கைகளை பிடித்து நிறுத்தினாள் அல்லவா? (இதன் உட்கருத்து - இரண்டாவது பிடியை க்ருஷ்ணன் உட்கொண்டால் குசேலனுக்கு மேலும் பொருட்செல்வம் அளிக்கவேண்டும். ஆனால் அதற்கான பொருள் மஹாலக்ஷ்மியிடமே இல்லை என்பதாகும். முதல் பிடியிலேயே க்ருஷ்ணனின் பக்தியால் அவ்வளவும் கொடுத்தாள்)