Sriman Narayaneeyam - Dasaka 87 - குசேலன் கதை (ச்லோகம் 894)

Dasaka 87 - குசேலன் கதை

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம் கரே க்ருஹீத்வாSகதய: புராக்ருதம் யதிந்தநார்த்தம் குரு தார சோதிதை: அபர்து வர்ஷம் ததமர்ஷி காநநே ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம் கரே க்ருஹீத்வா அகதய: புராக்ருதம் யத் இந்தந அர்த்தம் குரு தார சோதிதை: அபர்து வர்ஷம் தத் அமர்ஷி காநநே प्रपूजितं तं प्रियया च वीजितं करे गृहीत्वाऽकथयः पुरा कृतम् । यदिन्धनार्थं गुरुदारचोदितैरपर्तुवर्षं तदमर्षि कानने

குருவாயூரப்பா! நீ அவனை மிகவும் அன்புடன் வரவேற்றாய். உனது ருக்மிணி விசிறி வீசி அவனை உபசரித்தாள். நீ அவனிடம், “குசேலா! ஒருமுறை நமது குருவின் பத்தினி நம்மை காட்டிற்கு விறகு வெட்ட அனுப்பினாள். அப்போது பெய்த பெரும் மழையில் நாம் அகப்பட்டுக் கொண்டோம் அல்லவா?”, என்று பழங்கதைகளைப் பேசி மகிழ்ந்தாய்.