Sriman Narayaneeyam - Dasaka 87 - குசேலன் கதை (ச்லோகம் 893)
Dasaka 87 - குசேலன் கதை
கதோSயமாச்சர்யமயீம் பவத்புரீம் க்ருஹேஷு சைப்யா பவநம் ஸமேயிவாந் ப்ரவிச்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம் தவாதிஸமபாவநயா து கிம் புந: கத: அயம் ஆச்சர்யமயீம் பவத் புரீம் க்ருஹேஷு சைப்யா பவநம் ஸமேயிவாந் ப்ரவிச்ய வைகுண்டம் இவ ஆப நிர்வ்ருதிம் தவ அதி ஸமபாவநயா து கிம் புந: गतोऽयमाश्चर्यमयीं भवत्पूरीं गृहेषु शैब्याभवनं समेयिवान् । प्रविश्य वैकुण्ठमिवाप निर्वृतिं तवातिसम्भावनया तु किं पुनः
குருவாயூரப்பா! உனது வியக்கத்தக்கதான துவாரகையை குசேலன் அடைந்தான். அதில் உள்ள பல உயர்ந்த வீடுகளுக்கு நடுவில் இருந்த ருக்மணியின் வீட்டை அடைந்தான். அப்போது அவன் ஸ்ரீவைகுண்டத்திற்குள் நுழைந்தது போன்று மிகுந்த ஆனந்தம் அடைந்தான். மேலும் நீ மிகவும் சிறப்புடன் அவனை வரவேற்றாய். இதனால் அவன் மேலும் ஆனந்தம் அடைந்தான் என்பதைக் கூறவேண்டுமா?