Sriman Narayaneeyam - Dasaka 87 - குசேலன் கதை (ச்லோகம் 892)
Dasaka 87 - குசேலன் கதை
இதீரிதோSயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா ஜுகுப்ஸமாநோSபி தநே மதாவஹே ததா த்வதாலோகந கௌதகாத் யயௌ வஹந் படாந்தே ப்ருதுகாநுபாயநம் இதி ஈரிதம் அயம் ப்ரியயா க்ஷுத் ஆர்த்தயா ஜுகுப்ஸமாந: அபி தநே மத ஆவஹே ததா த்வத் ஆலோகந கௌதகாத் யயௌ வஹந் பட அந்தே ப்ருதுகாந உபாயநம் इतीरितोऽयं प्रियया क्षुधार्तया जुगुप्समानोऽपि धने मदावहे । तदा त्वदालोकनकौतुकाद्ययौ वहन् पटान्ते पृथुकानुपायनम्
குருவாயூரப்பா! தனது மனைவி பசியால் வருந்திய காரணத்தால் மட்டுமே இவ்விதமாகக் கூறுகிறாள் என்பதை குசேலன் உணர்ந்தான். மிகுந்த செல்வமானது கர்வத்தை வளர்க்கும் என்பதை அறிந்து, செல்வத்தின் மீது வெறுப்புடன் இருந்தான். இருந்தாலும் நீண்ட நாளைக்குப் பின்னர் உன்னைச் சந்திக்கும் வாய்ப்பிற்காக மகிழ்ந்தான். தனது துணியின் முடிப்பில் சிறிது அவல் எடுத்துக் கொண்டு துவாரகைக்குக் கிளம்பினானாமே!