Sriman Narayaneeyam - Dasaka 87 - குசேலன் கதை (ச்லோகம் 891)
Dasaka 87 - குசேலன் கதை
ஸமாந சீலாSபி ததீய வல்லபா ததைவ நோ சித்த ஜயம் ஸமேயுஷீ கதாசிதூசே பத வ்ருத்தி லப்தயே ரமாபதி: கிம் ந ஸகா நிஷேவ்யதே ஸமாந சீலா அபி ததீய வல்லபா ததா ஏவ நோ சித்த ஜயம் ஸமேயுஷீ கதாசித் ஊசே பத வ்ருத்தி லப்தயே ரமாபதி: கிம் ந ஸகா நிஷேவ்யதே समानशीलाऽपि तदीयवल्लभा तथैव नो चित्तजयं समेयुषी । कदाचिदूचे बत वृत्तिलब्धये रमापतिः किं न सखा निषेव्यते
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவனுடைய மனைவியும், அவனுக்கு நிகரான குணங்களையும் அமைதியையும் பக்தியையும் உடையவளாகவே இருந்தாள். இருந்தாலும் தனது மனதை அவளால் அடக்க இயலவில்லை. ஒருநாள் அவள் குசேலனிடம், “மஹாலக்ஷ்மியின் கணவனான அந்தக் க்ருஷ்ணன் உங்கள் நண்பனாயிற்றே! நமது குடும்பம் நடத்தத் தேவையான செல்வத்தை அவரிடம் இருந்து பெற இயலாதா?”, என்று கேட்டாள்.