Sriman Narayaneeyam - Dasaka 87 - குசேலன் கதை (ச்லோகம் 890)

Dasaka 87 - குசேலன் கதை

குசேல நாமா பவத: ஸதீர்த்யதாம் கத: ஸ ஸாந்தீபநி மந்திரே த்விஜ: த்வதேக ராகேண தநாதி நிஸ்ப்ருஹோ திநாதி நிந்யே ப்ரசமீ க்ருஹாச்ரமீ குசேல நாமா பவத: ஸதீர்த்யதாம் கத: ஸ ஸாந்தீபநி மந்திரே த்விஜ: த்வத் ஏக ராகேண தநாதி நிஸ்ப்ருஹ: திநாதி நிந்யே ப்ரசமீ க்ருஹ ஆச்ரமீ कुचेलनामा भवतः सतीर्थ्यतां गतः स सान्दीपनिमन्दिरे द्विजः । त्वदेकरागेण धनादिनिस्पृहो दिनानि निन्ये प्रशमी गृहाश्रमी

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸாந்தீபனி முனிவரின் ஆச்மரத்தில் உன்னுடன் குசேலன் என்று ஒருவன் கல்வி பயின்றான். அவன் மிகவும் அமைதியானவன்; நல்ல இல்லறத்தில் உள்ளவன்; உன்னிடம் மாறாத அன்பும் பக்தியும் கொண்டிருந்தான். இதனால் இந்த உலகில் உள்ள பொரு ட்கள் மீது பற்றுதல் இல்லாமல் இருந்தான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-80 மற்றும் 81 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.