Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 889)
Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்
தர்மௌகம் தர்மஸூநோரபிததத் அகிலம் சந்தம்ருத்யுஸ்ஸ பீஷ்ம த்வாம் பச்யந் பக்தி பூம்நைவ ஹி ஸபதி யயௌ நிஷ்கல ப்ரஹ்மபூயம் ஸம்யாஜ்யாதாச்வமேதைஸ்த்ரிபி: அதிமஹிதைர் தர்மஜம் பூர்ண காமம் ஸம்ப்ராப்தோ த்வாரகாம் த்வம் பவநபுர பதே பாஹி மாம் ஸர்வரோகாத் தர்மௌகம் தர்மஸூநோ: அபிததத் அகிலம் சந்த ம்ருத்யு: ஸ பீஷ்ம: த்வாம் பச்யந் பக்தி பூம்நா ஏவ ஹி ஸபதி யயௌ நிஷ்கல ப்ரஹ்ம பூயம் ஸம்யாஜ்ய அத அச்வமேதை: த்ரிபி: அதி மஹிதை: தர்மஜம் பூர்ண காமம் ஸம்ப்ராப்த: த்வாரகாம் த்வம் பவநபுர பதே பாஹி மாம் ஸர்வரோகாத் धर्मौघं धर्मसूनोरभिदधदखिलं छन्दमृत्युः स भीष्मस्त्वां पश्यन् भक्तिभूम्नैव हि सपदि ययौ निष्कलब्रह्मभूयम् । संयाज्याथाश्वमेधैस्त्रिभिरतिमहितैर्धर्मजं पूर्णकामं सम्प्राप्तो द्वारकां त्वं पवनपुरपते पाहि मां सर्वरोगात्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தான் விருப்பம் கொண்ட நேரத்தில் மரணம் அடையும்படியான வரம் பெற்றிருந்த பீஷ்மர், தர்மனுக்குப் பலவிதமான நல்லறங்களைப் போதித்தார். உன்னிடம் உள்ள பக்தி மிகுதியாக, உன்னைப் பார்த்துக் கொண்டே மோக்ஷம் பெற்றாராமே! அதன் பின்னர், தனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியவராக இருந்த தர்மனுக்காக மூன்று அச்வமேத யாகங்களைச் நீ செய்தாயாமே! இறுதியாகத் துவாரகைக்குச் சென்றாய். இப்படிப்பட்ட நீ என்னை அனைத்து பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.***