Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 888)
Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்
ஸம்ஸுப்த த்ரௌபதயே க்ஷபண ஹத தியம் த்ரௌணிமேத்ய த்வதுக்த்யா தந் முக்தம் ப்ராஹ்மஸ்த்ரம் ஸமஹ்ருத விஜயோ மௌலிரத்நம் ச ஜஹ்ரே உச்சித்யை பாண்டவாநாம் புநரபி ச விசதி உத்தரா கர்ப்பமஸ்த்ரே ரக்ஷந்நங்குஷ்டமாத்ர: கில ஜடரமகா: சக்ரபாணிர் விபோ த்வம் ஸம்ஸுப்த த்ரௌபதயே க்ஷபண ஹத தியம் த்ரௌணிம் ஏத்ய த்வத் உக்த்யா தத் முக்தம் ப்ராஹ்மம் அஸ்த்ரம் ஸமஹ்ருத விஜய: மௌலிரத்நம் ச ஜஹ்ரே உச்சித்யை பாண்டவாநாம் புந: அபி ச விசதி உத்தரா கர்ப்பம் அஸ்த்ரே ரக்ஷந் அங்குஷ்ட மாத்ர: கில ஜடரம் அகா: சக்ரபாணி: விபோ த்வம் संसुप्तद्रौपदेयक्षपणहतधियं द्रौणिमेत्य त्वदुक्त्या तन्मुक्तं ब्राह्ममस्त्रं समहृत विजयो मौलिरत्नं च जह्रे । उच्छित्त्यै पाण्डवानां पुनरपि च विशत्युत्तरागर्भमस्त्रे रक्षन्नङ्गुष्ठमात्रः किल जठरमगाश्चक्रपाणिर्विभो त्वम्
குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! (துரோணரின் மகனான) அசுவத்தாமன் தீய எண்ணம் கொண்டவனாக, திரௌபதியின் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களைக் கொன்றான். மேலும் ப்ரஹ்மாஸ்திரத்தையும் தொடுத்தான். உனது கட்டளைப்படி அர்ஜுனன் அந்த அஸ்திரத்தைத் தடுத்து நிறுத்தினான். மேலும் அசுவத்தாமன் தலையில் இருந்த இரத்தினக்கல்லையும் கவர்ந்தான். அதன் பின்னர் அசுவத்தாமன் பாண்டவர்களின் வம்சத்தை அழிக்க ஏவிய அஸ்திரமானது உத்தரையின் கர்ப்பத்தில் பாய்ந்தது. நீ உடனே கட்டைவிரல் அளவுள்ளவனாக மாறி, ஸுதர்சன சக்கரம் உடையவனாக, உத்தரையின் கர்ப்பத்தில் நுழைந்தாயாமே!