Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 887)

Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்

யுத்தாதௌ தீர்த்தகாமீ ஸ கலு ஹலதரோ நைமிச க்ஷேத்ரம்ருச்சந் அப்ரத்யுத்தாயி ஸூத க்ஷய க்ருதத ஸுதம் தத்பதே கல்பயித்வா யஜ்ஞக்நம் வல்கலம் பர்வணி பரிதலயந் ஸ்நாந தீர்த்தோ ரணாந்தே ஸம்ப்ராப்தோ பீம துர்யோதந ரணம் அசமம் வீக்ஷ்ய யாத: புரீம் தே யுத்த ஆதௌ தீர்த்த காமீ ஸ கலு ஹலதர: நைமிச க்ஷேத்ரம் ருச்சந் அப்ரத்யுத்தாயி ஸூத க்ஷய க்ருத் அத ஸுதம் தத் பதே கல்பயித்வா யஜ்ஞக்நம் வல்கலம் பர்வணி பரிதலயந் ஸ்நாந தீர்த்த: ரண அந்தே ஸம்ப்ராப்த: பீம துர்யோதந ரணம் அசமம் வீக்ஷ்ய யாத: புரீம் தே युद्धादौ तीर्थगामी स खलु हलधरो नैमिशक्षेत्रमृच्छ - न्नप्रत्युत्थायिसूतक्षयकृदथ सुतं तत्पदे कल्पयित्वा । यज्ञघ्नं बल्वलं पर्वणि परिदलयन् स्नाततीर्थो रणान्ते सम्प्राप्तो भीमदुर्योधनरणमशमं वीक्ष्य यातः पुरीन्ते

குருவாயூரப்பா! யுத்தம் தொடங்கிய காலத்திலேயே பலராமன் நைமிசாரண்யம் சென்று விட்டான். இவன் வருவதை உணர்ந்தும் ஆசனத்தில் இருந்து எழுந்து மரியாதை செய்யாத ஸூத பௌராணிகரை அவன் கொன்றான். அவரது இடத்தில் அவரது மகனை அமர்த்தினான். அங்கு இருந்த வல்கலன் என்ற அசுரன், முனிவர்களை வேள்வி செய்ய விடாமல் தடுத்தான். அவனைப் பலராமன் அழித்தான். பிறகு பல்வேறு புண்ணிய நீர்களில் நீராடி, யுத்தம் முடியும் நேரத்தில் குருக்ஷேத்ரத்திற்கு வந்தான். அவன் வந்த நேரம், பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதைப்போர் நடந்தது. இதனைக் கண்ட பலராமன் துவாரகைக்குச் சென்று விட்டான்.