Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 886)
Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்
யுத்தே த்ரோணஸ்ய ஹஸ்தி ஸ்திர ரண பகதத்தேரிம் வைஷ்ணவாஸ்த்ரம் வக்ஷஸ்யாதத்த சக்ர ஸ்தகித ரவி மஹா: ப்ரார்த்தயத் ஸிந்துராஜம் நாகாஸ்த்ரே கர்ண முக்தே க்ஷிதிமவநம் அயந் கேவலம் க்ருத்த மௌலிம் தத்ரே தத்ராபி பார்த்தம் கிமிவ நஹி பவாந் பாண்டவாநாமகார்ஷீத் யுத்தே த்ரோணஸ்ய ஹஸ்தி ஸ்திர ரண பகதத்த ஈரிதம் வைஷ்ணவ அஸ்த்ரம் வக்ஷஸி ஆதத்த சக்ர ஸ்தகித ரவி மஹா: ப்ரார்த்தயத் ஸிந்துராஜம் நாகாஸ்த்ரே கர்ண முக்தே க்ஷிதிம் அவநம் அயந் கேவலம் க்ருத்த மௌலிம் தத்ரே தத்ர அபி பார்த்தம் கிம் இவ நஹி பவாந் பாண்டவாநாம் அகார்ஷீத் युद्धे द्रोणस्य हस्तिस्थिररणभगदत्तेरितं वैष्णवास्त्रं वक्षस्याधत्त चक्रस्थगितरविमहाः प्रार्दयन्सिन्धुराजम् । नागास्त्रे कर्णमुक्ते क्षितिमवनमयन् केवलं कृत्तमौलिं तत्रे तत्रापि पार्थं किमिव नहि भवान् पाण्डवानामकार्षीत्
குருவாயூரப்பா! அர்ஜுனன் துரோணருடன் மோதியபோது, பகதத்தன் யானை மீது அமர்ந்து கொண்டு உன்மீது நாராயண அஸ்திரத்தைத் தொடுத்தானாமே! உனது திருமார்பினால் அதனைத் தாங்கி நிறுத்தினாய். உனது சக்கரத்தின் மூலமாக சூரியனை மறையும்படி ஒரு மாயையை உண்டாக்கி, ஸிந்துராஜனான ஜயத்ரதனை வீழ்த்தினாய். அர்ஜுனன் மீது கர்ணன் நாகாஸ்திரத்தைச் செலுத்தியபோது, நீ தேரைச் சற்று கீழே அழுத்தி, அர்ஜுனனின் க்ரீடத்தை மட்டும் அந்த அஸ்திரம் தாக்கும்படி செய்தாயாமே! நீ பாண்டவர்களுக்கு என்ன நன்மைகள்தான் செய்யவில்லை!