Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 885)
Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்
பக்தோத்தம்ஸேSத பீஷ்மே தவ தரணி பர க்ஷேப க்ருத்யைக ஸக்தே நித்யம் நித்யம் விபிந்தத்யயுதஸமதிகம் ப்ராப்த ஸாதே ச பார்த்தே நிச்சஸ்த்ரத்வ ப்ரதிஜ்ஞாம் விஜஹத் அரிவரம் தாரயந் க்ரோத சாலீ இவ ஆதாவந் ப்ராஞ்ஜலிம் தம் நதசிரஸம் அதோ வீக்ஷ்ய மோதாதபாகா: பக்த உத்தம்ஸே அத பீஷ்மே தவ தரணி பர க்ஷேப க்ருத்யே ஏக ஸக்தே நித்யம் நித்யம் விபிந்ததி அயுத ஸம அதிகம் ப்ராப்த ஸாதே ச பார்த்தே நிச்சஸ்த்ரத்வ ப்ரதிஜ்ஞாம் விஜஹத் அரிவரம் தாரயந் க்ரோத சாலீ இவ ஆதாவந் ப்ராஞ்ஜலிம் தம் நதசிரஸம் அத வீக்ஷ்ய மோதாத் அபாகா: भक्तोत्तंसेऽथ भीष्मे तव धरणिभरक्षेपकृत्यैकसक्ते नित्यं नित्यं विभिन्दत्ययुतसमधिकं प्राप्तसादे च पार्थे । निश्शस्त्रत्वप्रतिज्ञां विजहदरिवरं धारयन्क्रोधशाली - वाधावन् प्राञ्जलिं तं नतशिरसमथो वीक्ष्य मोदादपागाः
குருவாயூரப்பா! உனது பக்தர்களுள் மிகவும் உத்தமரான பீஷ்மர், பூமியின் பாரத்தைக் குறைப்பதான உனது உள்நோக்கம் ஒன்றையே தனது சிந்தனையாகக் கொண்டு அன்றாடம் யுத்தத்தில் பதினாயிரம் பேரைக் கொன்று வந்தார். இதனைக் கண்ட அர்ஜுனன் சோர்வுற்றான். உடனே, “ஆயுதம் தொடுவதில்லை”, என்ற நீ செய்த சபதத்தையும் மறந்து, உனது சிறந்த ஆயுதமான சக்கரத்தைக் கையால் சுழற்றியபடி பீஷ்மரை நோக்கி ஓடினாயாமே? உன்னைக் கண்டு மகிழ்ந்த பீஷ்மர் கைகுவித்து தலை வணங்கி நின்றார். நீயும் மகிழ்வுற்றுத் திரும்பிச் சென்றாயாமே!