Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 884)

Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்

ஜிஷ்ணோஸ்த்வம் க்ருஷ்ண ஸூத: கலு ஸமர முகே பந்து காதே தயாளும் கிந்நம் தம் வீக்ஷ்ய வீரம் கிமிதமயி ஸகே நித்ய ஏகோSயமாத்மா கோ வத்ய: கோSத்ர ஹந்தா ததிஹ வதபியம் ப்ரோஜ்ஜய மய்யர்ப்பிதாத்மா தர்ம்யம் யுத்தம் சரேதி ப்ரக்ருதிம் அநயதா தர்சயந் விச்வ ரூபம் ஜிஷ்ணோ: த்வம் க்ருஷ்ண ஸூத: கலு ஸமர முகே பந்து காதே தயாளும் கிந்நம் தம் வீக்ஷ்ய வீரம் கிம் இதம் அயி ஸகே நித்ய ஏக: அயம் ஆத்மா க: வத்ய: க: அத்ர ஹந்தா தத் இஹ வத பியம் ப்ரோஜ்ஜய மயி அர்ப்பித ஆத்மா தர்ம்யம் யுத்தம் சர இதி ப்ரக்ருதிம் அநயதா தர்சயந் விச்வ ரூபம் जिष्णोस्त्वं कृष्ण सूतः खलु समरमुखे बन्धुघाते दयालुं खिन्नं तं वीक्ष्य वीरं किमिदमयि सखे नित्य एकोऽयमात्मा । को वध्यः कोऽत्र हन्ता तदिह वधभियं प्रोज्झ्य मय्यर्पितात्मा धर्म्यं युद्धं चरेति प्रकृतिमनयथा दर्शयन् विश्वरूपम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தப் போரில் நீ அர்ஜுனனின் தேரில் சாரதியாக அமர்ந்தாய். போர் தொடங்கும் நிலையில் தனது எதிரில் நின்றிருந்த தனது உறவினர்களை எதிர்த்துப் போரிடவேண்டும் என்பதை எண்ணி அர்ஜுனன் அஞ்சி கலங்கி நின்றான். இதனால் நீ அவனிடம், “நண்பனே! இது என்ன ஒரு சிந்தனை? ஆத்மா என்பது அழிவில்லாமல் உள்ளது. உலகில் கொல்பவன் யார்? கொல்லப்படுவன் யார்? (யாரும் இல்லை). ஆகையால் நீ கொல்லப் போவதால் உண்டாகும் பயத்தை (பாபம் காரணமாக உண்டான பயம்) விடுத்து, என்னிடம் உனது மனதை முழுவதுமாக சரணம் என்று அர்ப்பணம் செய்வாயாக! பின்னர் தர்மவழியில் போர் புரிவாய்!”, என்று கீதோபதேசம் செய்தாயாமே! உனது விசுவரூபத்தையும் அவனுக்குக் காண்பித்தாய். அவன் தனது இயல்பான குணங்களை அடைந்தான்.