Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 883)

Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்

யுத்தோத்யோகேSத மந்த்ரே மிலதி ஸதி வ்ருத: பல்குநேந த்வமேக: கௌரவ்யே தத்த ஸைந்ய: கரிபுரமகமோ தூத்ய க்ருத் பாண்டவார்த்தம் பீஷ்ம த்ரோணாதி மாந்யே தவ கலு வசநே திக்க்ருதே கௌரவேண வ்யாவ்ருண்வந் விச்வரூபம் முநி ஸதஸி புரீம் க்ஷோபயித்வாகதோSபூ: யுத்த உத்யோகே அத மந்த்ரே மிலதி ஸதி வ்ருத: பல்குநேந த்வம் ஏக: கௌரவ்யே தத்த ஸைந்ய: கரிபுரம் அகம: தூத்ய க்ருத் பாண்டவ அர்த்தம் பீஷ்ம த்ரோண ஆதி மாந்யே தவ கலு வசநே திக்க்ருதே கௌரவேண வ்யாவ்ருண்வந் விச்வரூபம் முநி ஸதஸி புரீம் க்ஷோபயித்வா கத: அபூ: युद्धोद्योगेऽथ मन्त्रे मिलति सति वृतः फल्गुनेन त्वमेकः कौरव्ये दत्तसैन्यः करिपुरमगमो दूत्यकृत् पाण्डवार्थम् । भीष्मद्रोणादिमान्ये तव खलु वचने धिक्कृते कौरवेण व्यावृण्वन् विश्वरूपं मुनिसदसि पुरीं क्षोभयित्वागतोऽभूः

குருவாயூரப்பா! அதன் பின்னர் யுத்தம் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது அர்ஜுனன் உன்னை மட்டும் தங்களுக்குத் துணையாக இருக்கும்படி வேண்டினான். உனது படைகளைத் தனக்கு அளிக்கும்படி துரியோதனன் கேட்டான். நீயும் அவர்கள் கேட்டபடி அளித்தாய். அதன் பின்னர் பாண்டவர்களின் தூதனாக ஹஸ்தினாபுரம் சென்றாய். உனது தூது வார்த்தைகளை பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட பலரும், முனிவர்களும் ஆமோதித்தனர். ஆனால் துரியோதனன் அவற்றை அலட்சியம் செய்தான். இதனால் கோபம் கொண்ட நீ முனிவர்கள் நிறைந்த அந்தச் சபையில் உனது விசுவரூபத்தைக் காண்பித்து அவர்கள் கலங்கும்படி செய்தாய். பின்னர் பாண்டவர்களிடம் திரும்பி வந்தாய்.