Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 882)

Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்

த்வய்யாயாதேSத ஜாதே கில குருஸதஸி த்யூதகே ஸம்யதாயா: க்ரந்தந்த்யா யாஜ்ஞ ஸேந்யா: ஸகருணம் அக்ருதாச்சேல மாலாமநந்தாம் அந்நாந்த ப்ராப்த சர்வாம்சஜ முநி சகித த்ரௌபதீ சிந்திதோSத ப்ராப்த: சாகாந்நமச்நந் முநிகணம் அக்ருதாஸ்த்ருப்திமந்தம் வநாந்தே த்வயி ஆயாதே அத ஜாதே கில குருஸதஸி த்யூதகே ஸம்யதாயா: க்ரந்தந்த்யா யாஜ்ஞ ஸேந்யா: ஸகருணம் அக்ருதா: சேல மாலாம் அநந்தாம் அந்ந அந்த ப்ராப்த சர்வ அம்சஜ முநி சகித் த்ரௌபதீ சிந்தித: அத ப்ராப்த: சாக அந்நம் அச்நந் முநிகணம் அக்ருதா: த்ருப்திம் அந்தம் வந அந்தே त्वय्यायातेऽथ जाते किल कुरुसदसि द्यूतके संयतायाः क्रन्दन्त्या याज्ञसेन्याः सकरुणमकृथाश्चेलमालामनन्ताम् । अन्नान्तप्राप्तशर्वांशजमुनिचकितद्रौपदी चिन्तितोऽथ प्राप्तः शाकान्नमश्नन् मुनिगणमकृथास्तृप्तिमन्तं वनान्ते

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ ஹஸ்தினாபுரத்தில் இருந்து துவாரகை கிளம்பியதும் அங்கு கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சூதாட்டம் நடந்தது. அதில் தான் பணையப் பொருளாக வைக்கப்பட்டு இழக்கப்படவும் நேர்ந்தது கண்டு திரௌபதி அழுதாள். நீ அவளுடைய புடவையை உனது கருணை போன்று அளவில்லாமல் வளரச் செய்தாய். முன்பு ஒரு சமயம் பாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில், அவர்கள் உணவு வேளை முடிந்த பின்னர் அவர்களிடம் விருந்தினராக பரமசிவனின் அவதாரமான துர்வாசர் வந்தார். (உணவு இல்லாமல் பயந்த) திரௌபதி உன்னைத் துதித்தாள். உடனே நீ அங்கு வந்து பாத்திரத்தில் இருந்த கீரையை உட்கொண்டு துர்வாஸருக்கும் அவரது சீடர்களுக்கும் உண்டான பசியை நீக்கினாய்.