Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 881)

Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்

க்ஷிப்த்வா ஸௌபம் கதா சூர்ணிதமுதகநிதௌ மங்க்ஷு ஸால்வேSபி சக்ரேண உத்க்ருத்தே தந்தவக்த்ர: ப்ரஸபமபிபதந் அப்யமுஞ்சத்கதாம் தே கௌமோதக்யா ஹதோSஸாவபி ஸுக்ருத நிதி: சைத்ய வத் ப்ராபதைக்யம் ஸர்வேஷாமேஷ பூர்வம் த்வயி த்ருத மநஸாம் மோக்ஷணார்த்தோSவதார: க்ஷிப்த்வா ஸௌபம் கதா சூர்ணிதம் உதகநிதௌ மங்க்ஷு ஸால்வே அபி சக்ரேண உத்க்ருத்தே தந்தவக்த்ர: ப்ரஸபம் அபிபதந் அப்யமுஞ்சத் கதாம் தே கௌமோதக்யா ஹத: அஸௌ அபி ஸுக்ருத நிதி: சைத்ய வத் ப்ராபத் ஐக்யம் ஸர்வேஷாம் ஏஷ பூர்வம் த்வயி த்ருத மநஸாம் மோக்ஷண அர்த்த: அவதார: क्षिप्त्वा सौभं गदाचूर्णितमुदकनिधौ मङ्क्षु साल्वेऽपि चक्रेणोत्कृत्ते दन्तवक्त्रः प्रसभमभिपतन्नभ्यमुञ्चद्गदां ते । कौमोदक्या हतोऽसावपि सुकृतनिधिश्चैद्यवत्प्रापदैक्यं सर्वेषामेष पूर्वं त्वयि धृतमनसां मोक्षणार्थोऽवतारः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸால்வனின் ஸௌபம் என்ற ஆகாய விமானத்தை உனது கதை ஆயுதத்தினால் தூளாக்கினாய். அதன் துகள்களைக் கடலில் எறிந்தாய். அவனுடைய கழுத்தையும் உனது சக்கரத்தால் அறுத்தாய். அப்போது தந்தவக்ரன் என்பவன் உன் மீது கதாயுதத்தை சுழற்றி அடித்தான். நீ உடனே கௌமோதகீ என்று அழைக்கப்படும் உனது கதையால் அவனைக் கொன்றாய். அவனும் சிசுபாலன் போல் உன்னுடன் மோக்ஷத்தை அடைந்தான் (இவனும் துவார பாலகர்களில் ஒருவன்; தசகம் 11 காண்க). கடந்த பிறவிகளில் உன்னிடம் ஈடுபாடு கொண்டிருந்தவர்களை மோக்ஷத்தின் மூலம் கரையேற்றுவதே உனது க்ருஷ்ணாவதாரம் அல்லவா?