Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 880)
Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்
தாவத் த்வம் ராமசாலீ த்வரிதமுபகத: கண்டித ப்ராய ஸைந்யம் ஸௌபேசம் தம் ந்யருந்தா: ஸ ச கில கதயா சார்ங்கமப்ரம்சயத் தே மாயாதாதம் வ்யஹிம்ஸீதபி தவ புரத: தத் த்வயாபி க்ஷணார்த்தம் நாஜ்ஞாயித்யாஹுரேகே ததிதம் அவமதம் வ்யாஸ ஏவ ந்யஷேதீத் தாவத் த்வம் ராமசாலீ த்வரிதம் உபகத: கண்டித ப்ராய ஸைந்யம் ஸௌபேசம் தம் ந்யருந்தா: ஸ ச கில கதயா சார்ங்க அப்ரம்சயத் தே மாயா தாதம் வ்யஹிம்ஸீத் அபி தவ புரத: தத் த்வயா அபி க்ஷணார்த்தம் ந அஜ்ஞாயி இதி ஆஹு: ஏகே தத் இதம் அவமதம் வ்யாஸ ஏவ ந்யஷேதீத் तावत्त्वं रामशाली त्वरितमुपगतः खण्डितप्रायसैन्यं सौभेशं तं न्यरुन्धाः स च किल गदया शार्ङ्गमभ्रंशयत्ते । मायातातं व्यहिंसीदपि तव पुरतस्तत् त्वयापि क्षणार्धं नाज्ञायीत्याहुरेके तदिदमवमतं व्यास एव न्यषेधीत्
குருவாயூரப்பா! நீ பலராமனுடன் விரைந்து துவாரகைக்கு வந்தாய். ஸால்வனின் படைகளை விரட்டியடித்து அவனைத் தடுத்தாய். அவன் தனது கதாயுதத்தின் மூலம் உனது கைகளில் இருந்த சார்ங்கம் என்னும் வில்லை வீழ்த்தினானாமே! பின்னர் உனது தந்தையைப் போல ஒருவரை மாயமாக உருவாக்கி அவரை (அந்த மாய உருவத்தை) கொன்றான். அவன் உண்மையாகவே உனது தந்தையைக் கொன்றான், அவன் செய்தது மாயை என்பதை நீ சில நொடிகள் உணரவில்லை என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இதனை வ்யாஸர் மறுத்தள்ளாரே!