Sriman Narayaneeyam - Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர் (ச்லோகம் 879)

Dasaka 86 - ஸால்வ வதம், பாரதப் போர்

ஸால்வோ பைஷ்மீ விவாஹே யது குல விஜிதச்சந்த்ரசூடாத் விமாநம் விந்தந் ஸௌபம் ஸ மாயீ த்வயி வஸதி குரூம்ஸ்த்வத் புரீமப்யபாங்க்ஷீத் ப்ரத்யும்நஸ்தம் நிருந்தந்நிகில யது படை: ந்யக்ரஹீதுக்ர வீர்யம் தஸ்யாமாத்யம் த்யுமந்தம் வயஜநி ச ஸமர: ஸப்தவிம்சத்யஹாந்த: ஸால்வ: பைஷ்மீ விவாஹே யது குல விஜித: சந்த்ரசூடாத் விமாநம் விந்தந் ஸௌபம் ஸ மாயீ த்வயி வஸதி குரூந் த்வத் புரீம் அப்யபாங்க்ஷீத் ப்ரத்யும்ந: தம் நிருந்தந் நிகில யது படை: ந்யக்ரஹீத் உக்ர வீர்யம் தஸ்ய ஆமாத்யம் த்யுமந்தம் வயஜநி ச ஸமர: ஸப்த விம்சதி அஹாந்த: साल्वो भैष्मीविवाहे यदुबलविजितश्चन्द्रचूडाद्विमानं विन्दन् सौभं स मायी त्वयि वसति कुरूंस्त्वत्पुरीमभ्यभाङ्क्षीत् । प्रद्युम्नस्तं निरुन्धन्नखिलयदुभटैर्न्यग्रहीदुग्रवीर्यं तस्यामात्यं द्युमन्तं व्यजनि च समरः सप्तविंशत्यहान्तः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ருக்மிணியின் திருமணத்தின்போது உனது யாதவ படைகளிடம் ஸால்வன் தோல்வியடைந்தான். (அதனால் சினம் கொண்டு) சிவனை வழிபட்டு ஸௌபம் என்று அழைக்கப்படும் ஆகாய விமானத்தைப் பெற்றான். நீ ராஜஸூய யாகத்திற்காக ஹஸ்தினாபுரம் சென்றிருந்தபோது, அந்தச் ஸால்வன் துவாரகையை தாக்கி பெரும் சேதம் உண்டாக்கினான். அவனைப் ப்ரத்யும்னன் தடுத்துப் போரிட்டான். ஸால்வனின் அமைச்சனான த்யுமான் என்பவனைக் கொன்றான். இப்படியாக அந்த யுத்தம் இருபத்து ஏழு நாட்கள் நடைபெற்றது.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-76 முதல் 79 முடிய உள்ளவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.