Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 878)

Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்

ததா ஹஸிதமுத்திதம் த்ருபத நந்தநா பீமயோ: அபாங்க கலயா விபோ கிமபி தாவதுஜ்ஜ்ரும்பயந் தரா பர நிராக்ருதௌ ஸபதி நாம பீஜம் வபந் ஜநார்த்தந மருத்புரீநிலய பாஹி மாமாமயாத் ததா ஹஸிதம் உத்திதம் த்ருபத நந்தநா பீமயோ: அபாங்க கலயா விபோ கிம் அபி தாவத் உஜ்ஜ்ரும்பயந் தரா பர நிராக்ருதௌ ஸபதி நாம பீஜம் வபந் ஜநார்த்தந மருத் புரீ நிலய பாஹி மாம் ஆமயாத் तदा हसितमुत्थितं द्रुपदन्दनाभीमयो - रपाङ्गकलया विभो किमपि तावदुज्जृम्भयन् । धराभरनिराकृतौ सपदि नाम बीजं वपन् जनार्दन मरुत्पुरीनिलय पाहि मामामयात्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஜனார்த்தனா! துரியோதனன் இது போன்று தடுமாறியதைக் கண்ட பீமனும் திரௌபதியும் மெதுவாகச் சிரித்தனர். உனது கடைக்கண் பார்வை மூலம் அவர்கள் சிரிப்பை ஒலி மிகுந்ததாக (துரியோதன் காதுகளில் ஒலிக்கும்படி) செய்தாய். இதன் மூலம் இந்தப் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்கான விதையை நீ விதைத்தாய் அல்லவா? என்னை பிணிகளில் இருந்து காப்பாற்றுவாயாக!***