Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 877)
Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்
தத: ஸுமஹிதே த்வயா க்ரதுவரே நிரூடே ஜநோ யயௌ ஜயதி தர்மஜோ ஜயதி க்ருஷ்ண இத்யாலபந் கல: ஸ து ஸுயோதநோ துதமநாஸ்ஸபத்ந ச்ரியா மயார்ப்பித ஸபா முகே ஸ்தல ஜல ப்ரமாதப்ரமீத் தத: ஸுமஹிதே த்வயா க்ரதுவரே நிரூடே ஜந: யயௌ ஜயதி தர்மஜ: ஜயதி க்ருஷ்ண இதி ஆலபந் கல: ஸ து ஸுயோதந: துதமநா: ஸபத்ந ச்ரியா மய அர்ப்பித ஸபா முகே ஸ்தல ஜல ப்ரமாத் அப்ரமீத் ततस्सुमहितो त्वया क्रतुवरे निरूढे जनो ययौ जयति धर्मजो जयति कृष्ण इत्यालपन् । खलः स तु सुयोधनो धुतमनास्सपत्नश्रिया मयार्पितसभामुखे स्थलजलभ्रमादभ्रमीत्
குருவாயூரப்பா! இப்படியாக அந்தப் பெருமை வாய்ந்த யாகத்தை நீ நிறைவேற்றினாய். அங்கு இருந்த அனைவரும் “தர்மன் வாழ்க! க்ருஷ்ணன் வாழ்க!”, என்று கூவினார்கள். இதனைக் கண்டும், பாண்டவர்களின் செழிப்பைக் கண்டும், துரியோதனன் மனம் கொதித்தான். மயனால் கட்டப்பட்ட அந்த மாளிகையில் இருந்த தரையை பார்த்து நீர் என்றும், நீரைப் பார்த்துத் தரை என்றும் தவறாக நினைத்துத் தடுமாறினானாமே!