Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 876)

Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்

நிவார்ய நிஜ பக்ஷகாநபிமுகஸ்ய வித்வேஷிண: த்வமேவ ஜஹ்ருஷே சிரோ தநுஜ தாரிணா ஸ்வாரிணா ஜநுஸ்த்ரிதய லப்தயா ஸதத சிந்தயா சுத்ததீ: த்வயா ஸ பரமேகதாமத்ருத யோகிநாம் துர்லபாம் நிவார்ய நிஜ பக்ஷகாந் அபிமுகஸ்ய வித்வேஷிண: த்வம் ஏவ ஜஹ்ருஷே சிர: தநுஜ தாரிணா ஸ்வ அரிணா ஜநு: த்ரிதய லப்தயா ஸதத சிந்தயா சுத்த தீ: த்வயா ஸ பரம் ஏகதாம் அத்ருத யோகிநாம் துர்லபாம் निवार्य निजपक्षगानभिमुखस्य विद्वेषिण - स्त्वमेव जहृषे शिरो दनुजदारिणा स्वारिणा । जनुस्त्रितयलब्धया सततचिन्तया शुद्धधी - स्त्वया स परमेकतामधृत योगिनां दुर्लभाम्

குருவாயூரப்பா! உனது நண்பர்களை நீ தடுத்தாய். அசுரர்களை அழிப்பதில் வல்லதாகிய உனது ஸுதர்சன சக்கரத்தின் மூலம் சிசுபாலனின் தலையை அறுத்தாய். அவன் முந்தைய மூன்று பிறவிகளிலும் இடைவிடாமல் உன்னுடன் பகைமையுடன் இருந்ததால், எப்போதும் உன் மீது சிந்தனை கொண்டவனாகவும் இருந்தான் (சிசுபாலன் என்பவன் துவார பாலகர்களில் ஒருவன் - தசகம் 11 காண்க). இதனால் அவன் தூய்மை பெற்று, யோகிகள் அடையக்கூடியதான மோக்ஷம் அடைந்தான்.