Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 875)
Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்
தத: ஸபதி சேதிபோ முநி ந்ருபேஷு திஷ்டத்ஸஹோ ஸபாஜயதி கோ ஜட: பசுப துர்துரூடம் வடும் இதி த்வயி ஸ துர்வசோ விததிமுத்வமந்நாஸநாத் உதாபததுதாயுத: ஸம்பதந்நமும் பாண்டவா: தத: ஸபதி சேதிப: முநி ந்ருபேஷு திஷ்டத்ஸு அஹோ ஸபா ஜயதி க: ஜட: பசுப துர்துரூடம் வடும் இதி த்வயி ஸ துர்வச: விததிம் உத்வமந் ஆஸநாத் உதாபதத் உதாயுத: ஸம்பதந் அமும் பாண்டவா: ततस्सपदि चेदिपो मुनिनृपेषु तिष्ठत्स्वहो सभाजयति को जडः पशुपदुर्दुरूटं वटुम् । इति त्वयि स दुर्वचोविततिमुद्वमन्नासना - दुदापतदुदायुधः समपतन्नमुं पाण्डवाः
குருவாயூரப்பா! அனைத்து அரசர்களும் முனிவர்களும் உன்னைப் பூஜிப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது சேதி நாட்டு அரசனான சிசுபாலன் என்பவன் எழுந்து, “(இவ்வளவு அரசர்களும் முனிவர்களும் இங்கு உள்ளபோது) இடையர்களில் ஒருவனான இந்தச் சிறுவனுக்குப் பூஜையை செய்வது யார்?”, என்று கூறினான். கைகளில் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு எழுந்தான். அவனைப் பாண்டவர்கள் கோபத்துடன் எதிர்த்தனர்.