Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 874)

Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்

தத: ஸவந கர்மணி ப்ரவரமக்ர பூஜா விதிம் விசார்ய ஸஹதேவ வாகநுகத: ஸ தர்மாத்மஜ: வ்யதத்த பவதே முதா ஸதஸி விச்வ பூதாத்மநே ததா ஸஸுர மாநுஷம் புவநமேவ த்ருப்திம் ததௌ தத: ஸவந கர்மணி ப்ரவரம் அக்ர பூஜா விதிம் விசார்ய ஸஹதேவ வாக் அநுகத: ஸ தர்மாத்மஜ: வ்யதத்த பவதே முதா ஸதஸி விச்வ பூதாத்மநே ததா ஸ ஸுர மாநுஷம் புவநம் ஏவ த்ருப்திம் ததௌ ततः सवनकर्मणि प्रवरमग्र्यपूजाविधिं विचार्य सहदेववागनुगतस्स धर्मात्मजः । व्यधत्त भवते मुदा सदसि विश्वभूतात्मने तदा ससुरमानुषं भुवनमेव तृप्तिः दधौ

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ராஜஸூய யாகத்திற்கு வந்திருப்பவர்களில் மிகவும் சிறந்தவர் யாரோ அவருக்கு பூஜை செய்து மரியாதை தருவது வழக்கம் ஆகும். உடனே ஸஹதேவன் எழுந்து, “நமது கடவுளாக இருக்கும் க்ருஷ்ணனையே பூஜிக்கலாம்”, என்று தர்மரிடம் கூறினான். இதனைக் கேட்டு மகிழ்ந்த தர்மர், அனைத்து உயிர்களின் ஆத்மாவாக உள்ள உனக்குப் பூஜை செய்தாராமே! இதனைக் கண்ட மனிதர்களும் தேவர்களும் மனம் நிறைவு அடைந்தனர்.