Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 872)
Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்
அசாந்த ஸமரோத்ததம் விடப பாடநா ஸம்ஜ்ஞயா நிபாத்ய ஜரஸஸ்ஸுதம் பவநஜேந நிஷ்பாடிதம் விமுச்ய ந்ருபதீந் முதா ஸமநுக்ருஹ்ய பக்திம் பராம் திதேசித கதஸ்ப்ருஹாநபி ச தர்மகுப்த்யை புவ: அசாந்த ஸமர உத்ததம் விடப பாடநா ஸம்ஜ்ஞயா நிபாத்ய ஜரஸ: ஸுதம் பவநஜேந நிஷ்பாடிதம் விமுச்ய ந்ருபதீந் முதா ஸமநுக்ருஹ்ய பக்திம் பராம் திதேசித கத: ஸ்ப்ருஹாந் அபி ச தர்ம குப்த்யை புவ; अशान्तसमरोद्धतं विटपपाटनासंज्ञया निपात्य जरसस्सुतं पवनजेन निष्पाटितम् । विमुच्य नृपतीन् मुदा समनुगृह्य भक्तिं परां दिदेशिथ गतस्पृहानपि च धर्मगुप्त्यै भुवः
குருவாயூரப்பா! முடிவு என்பதே இல்லாத அந்த யுத்தத்தில் ஜராஸந்தன் கர்வத்துடன் நின்றான். அப்போது நீ மரக்குச்சி ஒன்றை எடுத்து இரண்டாகப் பிளந்து பீமனுக்கு ஒரு குறிப்புக் கொடுத்தாய். இதனைப் புரிந்து கொண்ட பீமன், ஜராஸந்தனை இரண்டாகப் பிளந்துக் கொன்றான். நீ ஜராஸந்தனால் சிறை வைக்கப்பட்டிருந்த அரசர்களை விடுவித்தாய். உன்னிடம் ஆழ்ந்த பக்தியையும் அவர்களுக்கு வழங்கினாய். இதனால் அவர்கள் உலக விஷயங்களில் பற்று நீங்கியவர்களாக ஆனார்கள். அவர்களை தர்ம நெறியில் ஆட்சி செய்யும்படி கூறினாயாமே!