Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 871)

Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்

கிரிவ்ரஜபுரம் கதாஸ்ததநு தேவ யூயம் த்ரய: யயாச ஸமரோத்ஸவம் த்விஜ மிஷேண தம் மாகதம் அபூர்ண ஸுக்ருதம் த்வமும் பவநஜேந ஸங்க்ராமயந் நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுநா த்வமபி ராஜ யுத்த்வா ஸ்தித: கிரிவ்ரஜபுரம் கதா: ததநு தேவ யூயம் த்ரய: யயாச ஸமர உத்ஸவம் த்விஜ மிஷேண தம் மாகதம் அபூர்ண ஸுக்ருதம் து அமும் பவநஜேந ஸங்க்ராமயந் நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுநா த்வம் அபி ராஜ யுத்த்வா ஸ்தித: गिरिव्रजपुरं गतास्तदनु देव यूयं त्रयो ययाच समरोत्सवं द्विजमिषेण तं मागधम् । अपूर्णसुकृतं त्वमुं पवनजेन संग्रामयन् निरीक्ष्य सह जिष्णुना त्वमपि राजयुध्वा स्थितः

குருவாயூரப்பா! நீங்கள் மூவரும் அந்தணர்கள் போன்று வேடம் பூண்டு, மகத நாட்டின் தலைநகரான கிரிவ்ரஜம் என்ற நகரத்தை அடைந்தீர்களாமே! அங்கு ஜராஸந்தனிடம் மற்போர் புரிய விண்ணப்பித்தீர்கள். புண்ணிய செயல்கள் அதிகம் இல்லாத அந்த ஜராஸந்தனைப் பீமனுடன் மல்யுத்தம் செய்ய வைத்தாய். நீயும் அர்ஜுனனும் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தீர்களாமே!