Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 870)

Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்

அசேஷ தயிதா யுதே த்வயி ஸமாகதே தர்மஜோ விஜித்ய ஸஹஜைர்மஹீம் பவதபாங்க ஸம்வர்த்திதை: ச்ரியம் நிருபமாம் வஹந்நஹஹ பக்த தாஸாயிதம் பவந்தமயி மாகதே ப்ரஹிதவாந் ஸபீமார்ஜுநம் அசேஷ தயிதா யுதே த்வயி ஸமாகதே தர்மஜ: விஜித்ய ஸஹஜை: மஹீம் பவத் அபாங்க ஸம்வர்த்திதை: ச்ரியம் நிருபமாம் வஹந் அஹஹ பக்த தாஸாயிதம் பவந்தம் அயி மாகதே ப்ரஹிதவாந் ஸபீம அர்ஜுநம் अशेषदयितायुते त्वयि समागते धर्मजो विजित्य सहजैर्महीं भवदपाङ्गसंवर्धितैः । श्रियं निरुपमां वहन्नहह भक्तदासायितं भवन्तमयि मागधे प्रहितवान् सभीमार्जुनम्

குருவாயூரப்பா! உனது மனைவியர்களை அழைத்துக் கொண்டு நீ இந்த்ரப்ரஸ்தம் வந்து சேர்ந்தாய். உனது கடாக்ஷம் மூலம் தர்மபுத்ரராகிய யுதிஷ்டிரர், தனது தம்பிகளுடன் சேர்ந்து பல தேசங்களை வென்றார். ஒப்புமை இல்லாத செல்வங்களையும் பெற்றார். பக்தர்களின் அடிமையான உன்னை பீமனோடும் அர்ஜுனனோடும் ஜராஸந்தனுடன் போர் புரிய அனுப்பினாராமே!