Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 869)

Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்

யியாஸுரபிமாகதம் ததநு நாரதோதீரிதாத் யுதிஷ்டிர மகோத்யமாதுபய கார்ய பர்யாகுல: விருத்த ஜயிநோSத்வராதுபயஸித்திரித்யுத்தவே சசம்ஸுஷி நிஜை: ஸமம் புரமியேத யௌதிஷ்டிரீம் யியாஸு: அபிமாகதம் ததநு நாரத உதீரிதாத் யுதிஷ்டிர மக உத்யமாத் உபய கார்ய பர்யாகுல: விருத்த ஜயிந: அத்வராத் உபய ஸித்தி: இதி உத்தவே சசம்ஸுஷி நிஜை: ஸமம் புரம் இயேத யௌதிஷ்டிரீம் यियासुरभिमागधं तदनु नारदोदीरिता - द्युधिष्ठिरमखोद्यमादुभयकार्यपर्याकुलः । विरुद्धजयिनोऽध्वरादुभयसिद्धिरित्युद्धवे शशंसुषि निजैः समं पुरमियेथ यौधिष्ठिरीम्

குருவாயூரப்பா! நீ ஜராஸந்தனுடன் யுத்தம் செய்யக் கிளம்பினாய். அப்போது அங்கு வந்த நாரதர் உன்னிடம், தர்மர் ராஜஸூய யாகம் செய்யப் போவதைக் கூறினார். ஒரே நேரத்தில் இரண்டு அலுவல்கள் வந்ததை எண்ணி நீ வருத்தம் கொண்டாய் (எங்கு செல்வது என்று). இதனை உணர்ந்த உத்தவர் உன்னிடம், “ராஜஸூய யாகம் என்பது பகைவர்களை வென்ற பின்னர் நடத்தப்பட வேண்டியது ஆகும். ஆக, இரண்டும் ஒன்றாகக் கைகூடுவது உறுதியே ஆகும்”, என்றார். உடனே நீ உனது சேனைகளுடன் இந்த்ரப்ரஸ்தம் சென்றாய்.