Sriman Narayaneeyam - Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம் (ச்லோகம் 868)

Dasaka 85 - ஜராஸந்த வதம், சிசுபால வதம்

ததோ மகத பூப்ருதா சிர நிரோத ஸங்க்லேசிதம் சதாஷ்டக யுதாயுத்விதயமீச பூமிப்ருதாம் அநாத சரணாய தே கமபி பூருஷம் ப்ராஹிணோத் அயாசத ஸ மாகத க்ஷபணமேவ கிம் பூயஸா தத: மகத பூப்ருதா சிர நிரோத ஸங்க்லேசிதம் சத அஷ்டக யுத அயுத த்விதயம் ஈச பூமீப்ருதாம் அநாத சரணாய தே கம் அபி பூருஷம் ப்ராஹிணோத் அயாசத ஸ மாகத க்ஷபணம் ஏவ கிம் பூயஸா ततो मगधभूमृता चिरनिरोधसंक्लेशितं शताष्टकयुतायुतद्वितयमीश भूमीभृताम् । अनाथशरणाय ते कमपि पूरुषं प्राहिणो - दयाचत स मागधक्षपणमेव किं भूयसा

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மகத நாட்டின் மன்னனான ஜராஸந்தன் என்பவன் இருபதினாயிரத்து எண்ணூறு அரசர்களைத் தனது சிறையில் அடைத்து வைத்திருந்தான். அந்த அரசர்கள் பெரிதும் வருந்தினர். பின்னர் ஆதரவு இல்லாதவர்களுக்குப் புகலிடமாக விளங்கும் உன்னிடம் ஒரு தூதுவனை அனுப்பினர். இங்கு மேலும் கூறவேண்டியது என்ன? அந்தத் தூதுவன் உன்னிடம் ஜராசந்தனை அழிக்கும்படி வேண்டினான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-70 முதல் 75 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.