Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 865)

Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்

முனி வர நிவஹைஸ்தவாத பித்ரா துரித சமாய சுபாநி ப்ருச்யமாநை: த்வயி ஸதி கிமிதம் சுபாந்தரை: இதி உரு ஹஸிதைரபி யாஜிதஸ்ததாSஸௌ முனி வர நிவஹை: தவ அத பித்ரா துரித சமாய சுபாநி ப்ருச்யமாநை: த்வயி ஸதி கிம் இதம் சுப அந்தரை: இதி உரு ஹஸிதை: அபி யாஜித: ததா அஸௌ मुनिवरनिवहैस्तवाथ पित्रा दुरितशमाय शुभानि पृच्छ्यमानैः । त्वयि सति किमिदं शुभान्तरैरित्युरुहसितैरपि याजितस्तदासौ

குருவாயூரப்பா! உனது தந்தையான வஸுதேவர் அங்கிருந்த முனிவர்களிடம் பாபம் தொலைந்து புண்ணியம் உண்டாகும் நற்செயல்களை உபதேசிக்குமாறு கூறினார். அவர்கள் சிரித்துக் கொண்டே, (உன்னைப் பார்த்து), “நீ அருகில் உள்ளபோது நற்செயல்கள், கர்மங்கள் என்று ஏதாவது அவசியமா?”, என்றனர். ஆனாலும் வஸுதேவரிடம் யாகம் ஒன்றைச் செய்யும்படிக் கூறினர்.