Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 864)

Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்

ஸுக ரஸ பரிமிச்ரிதோ வியோக: கிமபி புராSபவதுத்தவோபதேசை: ஸமபவதமுத: பரம் து தாஸாம் பரம ஸுகைக்யமயீ பவத் விசிந்தா ஸுக ரஸ பரிமிச்ரித: வியோக: கிம் அபி புரா அபவத் உத்தவ உபதேசை: ஸமபவத் அமுத: பரம் து தாஸாம் பரம ஸுக ஐக்யம் அயீ பவத் விசிந்தா सुखरसपरिमिश्रितो वियोगः किमपि पुराऽभवदुद्धवोपदेशैः । समभवदमुतः परं तु तासां परमसुखैक्यमयी भवद्विचिन्ता

குருவாயூரப்பா! முன்பு உத்தவர் வந்திருந்தபோது அவர் கூறிய உபதேசங்கள் மூலம் கோபிகைகளுக்கு உண்டான துன்பம் சிறிது மறைந்திருந்தது. இப்போது நீ கூறியதைக் கேட்டவுடன், அவர்கள் வருத்தம் நீங்கி, மனம் முழுவதும் ஆனந்தமே நிரம்பியிருந்தது.