Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 863)

Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்

அபகத விரஹ வ்யதாஸ்ததா தா ரஹஸி விதாய ததாத தத்வ போதம் பரம ஸுக சிதாத்மகோSஹமாத்மேத்யுதது வ: ஸ்புடமேவ சேதஸீதி அபகத விரஹ வ்யதா: ததா தா ரஹஸி விதாய ததாத தத்வ போதம் பரம ஸுக சித் ஆத்மக: அஹம் ஆத்மா இதி உதயது வ: ஸ்புடம் ஏவ சேதஸி இதி अपगतविरहव्यथास्तदा ता रहसि विधाय ददाथ तत्त्वबोधम् । परमसुखचिदात्मकोऽहमात्मेत्युदयतु वः स्फुटमेव चेतसीति

குருவாயூரப்பா! நீ அவர்களுடன் தனிமையில் இருந்து அவர்கள் உன்னைப் பிரிந்ததன் காரணமாக உண்டான துன்பத்தை நீக்கினாய். பின்னர் அவர்களிடம், “நான் பரம ஆனந்தத்தின் வடிவம், ஞானத்தின் வடிவம் ஆவேன். இப்படியாக உள்ள பரம்பொருள் (பரமாத்மா) நானே ஆவேன் என்று நீங்கள் உங்கள் மனதில் உணர்ந்து கொள்ளுங்கள்”, என்று உன்னைப் பற்றிய உயர்ந்த ஞானத்தை உபதேசித்தாய்.