Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 861)

Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்

ஸபதி ச பவதீக்ஷணோத்ஸவேந ப்ரமுதித மாந ஹ்ருதாம் நிதம்பிநீநாம் அதிரஸ பரிமுக்த கஞ்சுலீகே பரிசப ஹ்ருத்யதரே குசே ந்யலைஷீ: ஸபதி ச பவத் ஈக்ஷண உத்ஸவேந ப்ரமுதித மாந ஹ்ருதாம் நிதம்பிநீநாம் அதி ரஸ பரிமுக்த கஞ்சுலீகே பரிசப ஹ்ருத்யதரே குசே ந்யலைஷீ: सपदि च भवदीक्षणोत्सवेन प्रमुषितमानहृदां नितम्बिनीनाम् । अतिरसपरिमुक्तकञ्चुलीके परिचयहृद्यतरे कुचे न्यलैषीः

குருவாயூரப்பா! கோபிகைகள் உன்னைக் கண்டவுடன் தங்கள் மனதில் இதுநாள் வரை கொண்டிருந்த கர்வத்தினை விட்டு மிகவும் மகிழ்வு கொண்டனர். அவர்களது மார்புக் கச்சைகள் தாமாகவே மகிழ்ச்சியால் அவிழ்ந்தன. முன்பு உனக்கு உண்டாகிய பழக்கம் காரணமாக இன்பம் விளைவிக்கும் அவர்கள் ஸ்தனங்களில் நீ ஒன்றிவிட்டாயாமே!