Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 858)

Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்

பஹுதர ஜநதா ஹிதாய தத்ர த்வமபி புநந் விநிமஜ்ய தீர்த்ததோயம் த்விஜ கண பரிமுக்த வித்த ராசி: ஸமமிலதா: குரு பாண்டவாதி மித்ரை: பஹுதர ஜநதா ஹிதாய தத்ர த்வம் அபி புநந் விநிமஜ்ய தீர்த்த தோயம் த்விஜ கண பரிமுக்த வித்த ராசி: ஸமமிலதா: குரு பாண்டவ ஆதி மித்ரை: बहुतरजनताहिताय तत्र त्वमपि पुनन् विनिमज्ज्य तीर्थतोयं । द्विजगणपरिमुक्तवित्तराशिः सममिलथाः कुरुपाण्डवादिमित्रैः

குருவாயூரப்பா! அனைத்து மனிதர்களின் நலனுக்காக அங்கு இருந்த புண்ணிய நீரில், நீ நீராடினாய். இதன் மூலம் அந்த நீரை மேலும் தூய்மைப்படுத்தினாய். அங்கு இருந்த அந்தணர்களுக்குத் தானம் பல கொடுத்தாய். பின்னர் (அங்கு வந்திருந்த) கௌரவர்களுடனும், பாண்டவர்களுடனும் உரையாடி மகிழ்ந்தாய்.