Sriman Narayaneeyam - Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல் (ச்லோகம் 857)

Dasaka 84 - ஸமந்த பஞ்சகம் செல்லுதல்

க்வசிதத தபநோபராக காலே புரி நிததத் க்ருதவர்ம காமஸூநூ யதுகுல மஹிளாவ்ருத: ஸுதீர்த்தம் ஸமுபகதோSஸி ஸமந்தபஞ்சகாக்யம் க்வசித் அத தபந உபராக காலே புரி நிததத் க்ருதவர்ம காமஸூநூ யதுகுல மஹிளா ஆவ்ருத: ஸுதீர்த்தம் ஸமுபகத: அஸி ஸமந்தபஞ்சக ஆக்யம் क्वचिदथ तपनोपरागकाले पुरि निदधत् कृतवर्मकामसूनू । यदुकुलमहिळावृतः सुतीर्थं समुपगतोऽसि समन्तपञ्चकाख्यम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒருமுறை நீ சூரிய க்ரஹணம் அன்று க்ருதவர்மனையும் அநிருத்தனையும் துவாரகை நகரத்திற்குக் காவலாக வைத்து விட்டு, ஸமந்தபஞ்சகம் என்ற இடத்திற்கு, யாதவர்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பெண்கள் உட்பட உன்னைத் தொடரச் சென்றாயாமே!விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-82, 83 மற்றும் 84 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.