Sriman Narayaneeyam - Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம் (ச்லோகம் 856)
Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம்
ஸாம்பம் கௌரவ்ய புத்ரீ ஹரண நியமிதம் ஸாந்த்வநார்த்தீ குரூணாம் யாதஸ்தத் வாக்ய ரோஷோத்த்ருத கரிநகரோ மோசயாமாஸ ராம: தே காத்யா: பாண்டவேயைரிதி யது ப்ருதநாம் நாமுசஸ்த்வம் ததாநீம் தம் த்வாம் துர்போத லீலம் பவநபுரபதே தாப சாந்த்யை நிஷேவே ஸாம்பம் கௌரவ்ய புத்ரீ ஹரண நியமிதம் ஸாந்த்வநா அர்த்தீ குரூணாம் யாத: தத் வாக்ய ரோஷ உத்த்ருத கரிநகர: மோசயாமாஸ ராம: தே காத்யா: பாண்டவேயை: இதி யது ப்ருதநாம் ந அமுச: த்வம் ததாநீம் தம் த்வாம் துர்போதலீலம் பவநபுரபதே தாப சாந்த்யை நிஷேவே साम्बं कौरव्यपुत्रीहरणनियमितं सान्त्वनार्थी कुरूणां यातस्तद्वाक्यरोषोद्धृतकरिनगरो मोचयामास रामः । ते घात्याः पाण्डवेयैरिति यदुपृतनां नामुचस्त्वं तदानीं तं त्वां दुर्बोधलीलं पवनपुरपते तापशान्त्यै निषेवे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஸாம்பன் (ஜாம்பவதியின் மகன்) என்பவன் துரியோதனின் மகளான லக்ஷணையைக் கவர்ந்து சென்றான். எனவே அவன் கௌரவர்களால் சிறை வைக்கப்பட்டான். அவனை மீட்டு வர பலராமன் சென்றான். ஆனால் அவர்கள் கூறிய சொற்களைக் கேட்டு கோபம் கொண்ட பலராமன், தனது கலப்பையால் ஹஸ்தினாபுரத்தையே பெயர்த்து, ஸாம்பனை மீட்டார். நீ பலராமனுடன் யாதவர்களை அனுப்பவில்லை. காரணம், கௌரவர்கள், பாண்டவர்களுடைய கைகளால் மடிய வேண்டியவர்கள் என்று நீ அறிவாய். இப்படிப்பட்ட லீலைகள் செய்தவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எனக்குத் துன்பம் நீங்கி அமைதி விளைய வேண்டுகிறேன்.***