Sriman Narayaneeyam - Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம் (ச்லோகம் 854)
Dasaka 83 - பௌண்ட்ரகன், த்விவிதன் வதம்
அப்யாபதத்யமித தாம்நி பவந் மஹாஸ்த்ரே ஹா ஹேதி வித்ருதவதீ கலு கோர க்ருத்யா ரோஷாத் ஸுதக்ஷிணமதக்ஷிண சேஷ்டிதம் தம் புப்லோஷ சக்ரமபி காசி புரீமதாக்ஷீத் அப்யாபததி அமித தாம்நி பவத் மஹா அஸ்த்ரே ஹா ஹா இதி வித்ருதவதீ கலு கோர க்ருத்யா ரோஷாத் ஸுதக்ஷிணம் அதக்ஷிண சேஷ்டிதம் தம் புப்லோஷ சக்ரம் அபி காசி புரீம் அதாக்ஷீத் अभ्यापतत्यमितधाम्नि भवन्महास्त्रे हा हेति विद्रुतवती खलु घोरकृत्या । रोषात्सुदक्षिणमदक्षिणचेष्टितं तं पुप्लोष चक्रमपि काशिपुरामधाक्षीत्
குருவாயூரப்பா! உன்னுடைய ஸுதர்சன சக்கரம் மிகுந்த ஒளியை வீசியபடி வந்தது. அதனால் துரத்தப்பட்ட அபிசாரதேவதையானது “ஹா ஹா” என்று கதறியபடி, தன்னை ஏவிய அந்த ஸுதக்ஷிணனையே அழித்தது. உனது சக்ரமானது காசி நகரத்தையே எரித்தது.